TNPSC Thervupettagam

தற்காலிக நீதிபதிகள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

February 3 , 2025 24 days 126 0
  • நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் தேக்கத்தை நீக்குவதற்காக வேண்டி உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற அதன் முந்தைய நிபந்தனையை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
  • "ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இரண்டு முதல் ஐந்து வரையிலான தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு 224Aவது சரத்தினைப் பயன்படுத்தி தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
  • 224Aவது சரத்தானது, உயர் நீதிமன்றங்களின் அமர்வுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பானதாகும்.
  • எந்தவொரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், அந்த நீதிமன்றத்தின் அல்லது வேறு எந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி வகித்த எந்தவொரு நபரையும் அந்த மாநிலத்திற்கான ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்படுமாறு கோரலாம்.
  • அவ்வாறு கோரப்படும் ஒவ்வொரு நபரும், அத்தகைய பணியாற்றும் போது, குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தீர்மானிக்கக் கூடிய சில கொடுப்பனவுகளுக்கான ஒரு உரிமையினைப் பெறுவார்.
  • மேலும் அவர் அனைத்து அதிகார வரம்பு, அதிகாரங்கள் மற்றும் சலுகைகளையும் அவர் பெறுவார், ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கருதப்படமாட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்