TNPSC Thervupettagam

தற்கொலை தொடர்பான பொருளாதாரச் சுமை

September 24 , 2024 60 days 148 0
  • ஒவ்வோர் ஆண்டும் தற்கொலைகளால் இந்தியா சுமார் 13.4 லட்சம் கோடி ரூபாய் (16 பில்லியன் டாலர்) பொருளாதார இழப்பினை எதிர்கொள்கிறது.
  • நாட்டின் மக்கள்தொகையில் 5 சதவீதம் மட்டுமே உள்ள கர்நாடகா, தற்கொலைகளால் அதிகப் பொருளாதார இழப்பினை எதிர்கொண்டுள்ளது என்பதோடு இதன் பங்கு 2.33 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • கர்நாடகா, தமிழ்நாடு (2.13 லட்சம் கோடி ரூபாய்) மற்றும் மகாராஷ்டிரா (1.81 லட்சம் கோடி ரூபாய்) ஆகிய மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதித் தாக்கம் ஆனது, நாட்டின் மொத்தத் தற்கொலை தொடர்பான பொருளாதார இழப்புகளில் சுமார் 45 சதவீதம் ஆகும்.
  • உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு 100,000 பேரிலும் சுமார் ஒன்பது பேர் தற் கொலையால் உயிரிழக்கின்றனர்.
  • இந்தியாவில், 100,000 பேருக்கு 14 நபர் என்ற விகிதமானது மிக அபாயகரமான அளவில் அதிகமாக உள்ளது.
  • "உலகின் தற்கொலை தலைநகரம்" என்று அறியப்படும் துரதிர்ஷ்டவசமான சிறப்புப் பெயரினை இந்தியா பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்