TNPSC Thervupettagam

தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு

April 24 , 2023 454 days 266 0
  • பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், தலித் கிறிஸ்தவர்களையும் கொண்டு வரக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது.
  • பௌத்தர்கள், சீக்கியர்கள் போன்று தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீட்டில் பயன் பெற வேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது.
  • 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச் சாதிகள்) ஆணையின்படி, இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் பட்டியலிடப் பட்ட சாதியினராகக் கருதப்பட முடியாது என்பதால் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.
  • மு. கருணாநிதி அவர்கள் 1996, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
  • மத்திய அரசானது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் தலைமையில் ஓர் ஆணையத்தினை அமைத்தது.
  • இடஒதுக்கீட்டில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களைச் சேர்க்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதே இதன் பணியாகும்.
  • சச்சார் குழு (2005) தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது.
  • நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது (2007) 1950 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையின் 3வது பத்தியினை நீக்கவும் பரிந்துரைத்தது.
  • அந்த ஆணையின் 3வது பத்தியானது இந்து அல்லாத எவரும் பட்டியல் சாதியினராக கருத முடியாது எனக் கூறுகிறது.
  • இந்த ஆணையானது 1956 ஆம் ஆண்டில் சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டில் புத்த மதத்தினரையும் பட்டியல் சாதியில் சேர்த்திட வேண்டி திருத்தப் பட்டது.
  • தற்போது இந்து, சீக்கியர் மற்றும் பௌத்தர் அல்லாத எவரும் பட்டியல் சாதியினராகக் கருத முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்