TNPSC Thervupettagam

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்

December 20 , 2023 214 days 491 0
  • தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதாவினை மாநிலங்களவை நிறைவேற்றி உள்ளது.
  • எதிர்காலத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (EC) நியமிப்பதற்கான வழிகளை இந்தச் சட்டம் வழங்கும்.
  • இந்தச் சட்டம் ஆனது, 1991 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்) என்ற சட்டத்தினை மாற்றி அமைக்கிறது.
  • தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையானது குடியரசுத் தலைவரால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீர்மானிக்கப்படும்.
  • தேர்தல் ஆணையத்தின் நியமனமானது, தெரிவுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும்.
  • இக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:
    • பிரதமர்,
    • ஒரு அமைச்சரவை அமைச்சர், மற்றும்
    • மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது பெரும்பான்மை கொண்ட எதிர்க் கட்சித் தலைவர்).
  • பாராளுமன்றம் இந்தத் தெரிவுச் செயல்முறையைப் பரிந்துரைப்பதற்கான சட்டத்தை உருவாக்கும் வரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் (அனூப் பரன்வால் வழக்கு) சமீபத்தில் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்