TNPSC Thervupettagam

தல்வீர் பண்டாரி – சர்வதேச நீதிமன்றம்

November 21 , 2017 2588 days 1452 0
  • சர்வதேச நீதிமன்றத்தின் [International Court of Justice-ICJ] நீதிபதி பணியிடங்களுக்கான தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தல்வீர் பண்டாரி மீண்டும் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் ICJ-ன் மொத்தமுள்ள 15 நீதிபதிகளில் சுழற்சி முறையில் 5 நீதிபதி பணிஇடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் கடைசி மற்றும் 5-வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சர்வதேச நீதிமன்ற சட்டத்திட்டப்படி, ஐ.நா. பொது சபையிலும் (UNGA-United Nations General Assembly), பாதுகாப்பு கவுன்சிலிலும் [United Nations Security Council – UNSC] அறுதிப் பெரும்பான்மை (Absolute Majority) வாக்குகள் பெறுபவர்களே நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • அதாவது பொது அவையில் 97 வாக்குகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் 8 வாக்குகளும் பெற வேண்டும்.
  • இதற்கான தேர்தல் நியூயார்க்கில் அமைந்துள்ள  ஐ.நா. தலைமையகத்தின் பொது அவையிலும், பாதுகாப்பு கவுன்சிலிலும் ஒரே நேரத்தில், தனித்தனியாக நடைபெற்றது.
  • அவ்வாறு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஐ.நா. பொது அவையில் 193 உறுப்பினர்களின் வாக்குகளில் தல்வீர் பண்டாரி 183 வாக்குகள் பெற்று பெரும்பான்மை பெற்றார். ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் பண்டாரியின் பெரும் போட்டியாளராக திகழ்ந்த   கிறிஸ்டோபர் கிரீன்உட் மொத்தமுள்ள 15 வாக்குகளில் 9 வாக்குகள் பெற்று பெரும்பான்மயை வென்றார்.
  • இந்நிலையில், இங்கிலாந்து தனது வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை போட்டியிலிருந்து விலக்கியதை தொடர்ந்து பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இதன்மூலம் இரண்டாவது முறையாக பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
  • மேலும் கடந்த 71 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் கூட சர்வதேச நீதிமன்றத்தில் இடம் பெறாமல்  இருப்பது இதுவே முதல்முறையாகும்..
  • 9 ஆண்டுகள் பதவிக்காலம் உடைய இப்பதவியில் பண்டாரி 2027 வரை பதவி வகிப்பார்.
  • தல்வீர் பண்டாரி 2014-ல் பத்ம பூஷன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நீதிமன்றம்  - ICJ
  • ICJ ஆனது ஐ.நா. வின் முதன்மை நீதி வழங்கும் அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் நெதர்லாந்தின்   தி ஹேக் நகரில் அமைந்துள்ளது.
  • இந்த நீதிமன்றமானது உறுப்பு நாடுகளினால் தாக்கல் செய்யப்பெறும் சட்ட விவகாரங்கள் சார்ந்த வழக்குகளைத் தீர்க்கும். மேலும் ஐநா பொதுஅவை மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள், நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படும் சட்ட விளக்கம் சார்ந்த கேள்விகளுக்கு ஆலோசனை கருத்துகளை வழங்கும்.
  • இதில் மொத்தம் 15 நீதிபதிகள் 9 ஆண்டுகாலமுடைய பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் [PCA – Permanent Court of Arbitration] உள்ள நாடுகளின் குழுக்களால் போட்டியிடப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேட்பாளர்களை ஐ.நா. பொதுஅவை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தேர்ந்தெடுக்கும்.
  • நீதிமன்றத்தின் தொடர்ந்த செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, 15 நீதிபதிகளில் 5 நீதிபதிகள் 3 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • ஒரே நாட்டைச் சேர்ந்த இரு நீதிபதிகள் இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.
  • P5 எனப்படும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர ஐந்து உறுப்பு நாடுகளான பிரான்ஸ், இரஷ்யா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் எப்போதும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும்.
  • ஆனால் இதற்கு மாற்றாக சீனா எந்த ஒரு வேட்பாளரையும் முன்னிறுத்தாத காரணத்தால் 1967 முதல் 1985 வரை எந்த ஒரு சீன நீதிபதியையும் இம்மன்றத்தில் இடம்பெறவில்லை.
  • வழக்கு விசாரணைகளில் நீதிபதிகள் கூட்டு தீர்ப்பையோ அல்லது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தையோ வழங்கலாம்.
  • வழக்கின் தீர்ப்பு மீதான முடிவுகளும், ஆலோசனை கருத்துகளும் பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படும். பெரும்பான்மை கிடைக்காமல் சமவாக்கு நிலை ஏற்பட்டால் மன்ற தலைவரின் முடிவு இறுதி தீர்ப்பாக அமையும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்