TNPSC Thervupettagam

தளவாடத் துறை- உள்கட்டமைப்பு அந்தஸ்து

November 23 , 2017 2587 days 949 0
  • மத்திய நிதி அமைச்சகமானது தளவாடத் துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்தை (Infrastructure status) வழங்கியுள்ளது.
  • தளவாடத் துறையின் உள்கட்டமைப்பானது பின்வருபவற்றை உள்ளடக்கியது,
    • கிடங்கு வசதிகள் (Warehousing Facility)
    • குளிர்பதன சங்கிலி-தொடர் வசதிகள் (Cold Chain Facility).
    • உள்நாட்டு கொள்கலன் நிலையத்தை உள்ளடக்கிய பல்-மாதிரி தளவாட பூங்கா
  • உள்கட்டமைப்பு அந்தஸ்திற்கான பரிந்துரை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்டது.
  • மத்திய நிதி அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
  • உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதால் தளவாடத் துறையில் உண்டாகும் தாக்கங்கள் பின்வருமாறு,
    • உற்பத்தி துறையை ஒப்பிடும் போது நீண்ட கால முதிர்வுடைய கடன்களை (Long term Maturity loan) பெற இயலும்.
    • கடன்கள் பெற விண்ணப்பித்தலின் போது சற்று அதிக சம பங்கு விகிதங்களை (equity ratio) பெற தகுதி பெறும்.
    • வெளிப்புற வணிக கடனுக்கு (External Commercial Borrowing) விண்ணப்பிக்கும் போது சில நன்மைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மைகளைப் பெறும்.
    • IDFC, IIFCL போன்ற சிறப்பு தனித்துறை கடன் வழங்கிகளிடம் மறு நிதியாக்கத்தை (Refinancing) செய்ய அனுமதிக்கப் பெறும்.
  • மேலும் தளவாடப் போக்குவரத்து மற்றும் கிடங்குகளின் மூலதன செலவை குறைக்கவும், அவற்றின் செயற்தன்மையை அதிகரிக்கவும் இந்த அந்தஸ்து உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றால் தளவாடங்களின் விலை குறையும்.
  • 2017ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் தளவாட செயல்திறன் குறியீட்டில் (Logistics performance Index) இந்தியாவின் தளவாட செயல்திறன் 54வது இடத்திலிருந்து 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • தளவாடத் துறையின் வளர்ச்சியானது நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை ஊக்குவிக்கும். அதனால் வேலைவாய்ப்பு உருவாக்கமும், உற்பத்தித் துறையும் ஊக்கம் பெறும். இது நாட்டின் GDP-யை அதிகரிக்க கருவியாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்