TNPSC Thervupettagam

தவாங்கில் ரோடோடென்ரான் பூங்கா

February 12 , 2018 2349 days 783 0
  • அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள தவாங் மாவட்டத்தில், சரிந்து வரும் ரோடோடென்ட்ரான் இனங்களைக் காப்பாற்றும் முயற்சியாக ரோடோடென்ரான் பூங்கா ஒன்று அம்மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இதில் 30க்கும் மேற்பட்ட ரோடோடென்ரான் இனப் பூக்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளது.
  • ரோடொடென்ரான் என்பது பூக்கும் தாவரங்களின் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பாலும் நீலகிரி, கிழக்கு மற்றும் மேற்கு இமயமலைகளில் காணப்படுகிறது.
  • இந்த வகை இனங்கள் மிதவெப்ப மண்டலக் காடுகளிலிருந்து பனி மண்டலப் புதர்கள் (Alpine Shrubs) வரை பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. ரோடோடென்ட்ரான்கள் குறும்புற்கள் முதல் பெரிய மரங்கள் வரையிலான வகைகளைக் கொண்டதாகும்.
  • கிழக்கு இமய மலையின் குளிர்தன்மை, ஈரமான சரிவுப் பகுதிகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் போன்றவை ரோடோடென்ட்ரான் இனங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும், வட கிழக்கு மாநிலங்களின் வளமான பல்வகை இனங்களுக்கும் உகந்த இடமாகத் திகழ்கிறது.
  • இந்த இனமானது உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மரமாக (State Tree) அறிவிக்கப்பட்டுள்ளது. கர்வால் இமயமலையில் இந்த இனத்தின் பூக்கும் நிகழ்வை மலர்களின் திருவிழா என்றறியப்படும் ‘பூல் சங்கிராந்தி‘ (Phool Sankranti) என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்