தனியார் விண்கலத் தயாரிப்பு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட தனது தவான் II எந்திரத்தினைப் பரிசோதனை செய்துள்ளது.
இந்த நிறுவனமானது, விக்ரம் II எனப்படும் அதன் கனரக விண்கலத்திற்காக இந்த க்ரையோஜெனிக் எந்திரத்தினை உருவாக்கியுள்ளது.
ஸ்கைரூட் நிறுவனமானது, தனது எந்திரத்தின் முதல் துணை சுற்றுப்பாதை (கிடை மட்ட திசைவேகம் எய்தா நிலை) சோதனையினை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொண்டது.
இதற்காக விக்ரம் S எனப்படும் ஒற்றைநிலைத் திட எரிபொருள் விண்கலம் ஒன்று பயன்படுத்தப் பட்டது.