உத்தரப்பிரதேச மாநில அரசானது யுனிசெப் (United Nations Children’s Emergency Fund-UNICEF) அமைப்புடன் இணைந்து தஸ்தக் (Dastak) எனும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
மாநிலத்தில் உள்ள உயிர்க்கொல்லி நோய்களான ஜப்பான் மூளைக் காய்ச்சல் (Japanese Encephalitis -JE) மற்றும் கடின மூளை வீக்க குறைபாடு (Acute Encephalitis -AE) போன்றவற்றை முழுவதும் ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் வீடுவாரியான பிரச்சாரமே (door to door campaign) தஸ்தக் (Dastak) ஆகும்.
இந்த தஸ்தக் பிரச்சாரத்தின் முழக்கம் (tagline)- “Darwaja Khatkhatao AES aur JE Ko bhagao”
இந்த பிரச்சாரமானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் 38 JE மற்றும் AE பாதிப்புள்ள மாவட்டங்களில் வீடு வாரியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் JE மற்றும் AE பாதிப்புடைய பகுதிகளானது பெரும்பாலும் நேபாள நாட்டுடன் ஒட்டி அமைந்துள்ள உத்திரப்பிரதேசத்தின் தராய் (Tarai Region) பகுதிகளிலேயே உள்ளது.
இப்பகுதியானது நாட்டின் ஒட்டு மொத்த AE சுமையில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ளது.