TNPSC Thervupettagam
April 26 , 2019 1921 days 690 0
  • ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருதிற்கான இரண்டாவது பதிப்பின் “இலக்கியப்” பிரிவில் 2010 ஆம் ஆண்டில் ”சோலோ” என்ற நாவலை இயற்றிய “ராணா தாஸ் குப்தாவிற்கு” தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
  • இந்த நாவலானது தனிமையாக்கல் தொடர்பான ஒரு கதையாகும். மேலும் இது தற்போது கையிருப்பில் இருக்கும் அனைத்துப் பணத்தின் இழப்பு தொடர்பான ஒரு புதினமும் ஆகும்.
  • 10,000 அமெரிக்க டாலர்கள், தாகூர் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சிலை மற்றும் இலக்கியப் பங்களிப்பிற்கான ஒரு சான்று ஆகியவை தாஸ் குப்தாவிற்கு வழங்கப்பட்டன.
  • “சமூகத்தில் சாதனை புரிதல்” என்ற பிரிவில் இதே விருதுக்கு ஜப்பானைச் சேர்ந்த யோஹெய் சசாகாவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தொழுநோய் ஒழிப்பில் இவரது பங்களிப்பிற்காகவும் உலக அமைதிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கவிதை மற்றும் புத்தகங்களின் மறுமலர்ச்சிக்காகத் தாகூர் விருதானது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்