இந்திய வானிலை ஆய்வுத் துறையானது மழைக் காலத்தில் ஆறுகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் உயரும் நீரின் அளவை மதிப்பீடு செய்வதற்காக தாக்கம் அடிப்படையிலான முன்னறிவிப்பு அணுகுமுறை எனப்படும் புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
இது மாநில அரசு ஆணையாளர்களுக்கு மழைப் பொழிவின் தாக்கத்தை நுண்ணிய அளவில் கண்காணிக்கவும் நிகழ்நேர முடிவுகளை எடுக்கவும் வேண்டி முந்தைய நிகழ்வுகளின் சூழ்நிலைக் காட்சிகளை காட்டும்.
இது கேரள வெள்ளம் போன்ற பேரழிவு நிலைமைகளைத் தவிர்க்க உதவும்.