TNPSC Thervupettagam

தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 09

September 11 , 2020 1450 days 454 0
  • பறைசாட்டப்பட்ட தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமானது முதன்முறையாக 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒருமித்த முடிவினால் ஏற்படுத்தப் பட்டதாகும். இது பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழும் லட்சக் கணக்கான குழந்தைகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் ஆகியவற்றுடன் இணைகின்றது.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி கொண்டாட்டத்தின் போது ‘அனைத்திற்கும் மேலானது கல்வி’ என்ற அமைப்பானது “#Unite To Protect” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகின்றது.
  • இது அதன் பங்காளர்களான யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் ‘நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரம்’ ஆகியவற்றுடன் இணைந்து தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான  ஓர் உலகளாவிய பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்