குக்கி-சோ குடிமை சமூக அமைப்புகள் ஆனது, மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தாங்ஜிங் மலையில் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு எதிராக மெய்தி சமூகத்தினை "எச்சரிக்கை" செய்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் அங்கு வருகை தரும் மெய்தி சமூகத்தினருக்கு தாங்ஜிங் மலை ஒரு புனிதத் தலமாக கருதப்படுகிறது.
பண்டைய காலங்களிலிருந்து, இந்த மலை உச்சியில் அமைந்துள்ள அந்த மலைகளின் பாதுகாவலரான இபுதோ தாங்ஜிங்கின் ஆலயத்திற்கு மெய்திகள் ஆண்டுதோறும் ஒரு யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
குகி-சோ பழங்குடியினர் இந்த மலை மெய்திகளின் பிரத்தியேக புனித தலம் என்பதை மறுக்கின்றனர்.