TNPSC Thervupettagam

தானியங்கி வாகனங்களில் நுண்புள்ளித் தொழில்நுட்பம்

July 31 , 2019 1946 days 661 0
  • மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மோட்டார் வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை நுண்புள்ளித் தொழில்நுட்பத்துடன் இணைக்க அனுமதிக்கும் வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நுண்புள்ளித் தொழில்நுட்பம் என்பது வாகனத்தின் அமைப்பையும் அதன் பாகங்களையும் நுண்புள்ளிகளால் தெளிக்கப்படுவதாகும். இது ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றது.
  • வாகனத்திற்கு மட்டுமின்றி எந்தவொரு பாகத்திற்கும் சேதம் ஏற்படாமல் இதனை நீக்க முடியாது.
  • இந்த கண்ணுக்குத் தெரியாத நுண் புள்ளிகளை நுண்ணோக்கியின் உதவியுடன் நேரடியாகப் படித்தறிய முடியும். இது புற ஊதா ஒளி ஆதாரத்தின் உதவியுடன் அடையாளம் காணப்படுகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பமானது வாகனங்களின் திருட்டைக் கண்டுபிடிக்கவும் போலி உதிரி பாகங்கள் அதில் பயன்படுத்துதலைக் கண்டுபிடிக்கவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்