அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் விப்ரோ 3D அமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து தானியங்கி சுவாசக் கருவிகளின் (வென்டிலேட்டர்கள்) முன்மாதிரிகளை உருவாக்க உள்ளன.
கோவிட் -19 நெருக்கடியின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த வென்டிலேட்டர்கள் உதவும்.
வென்டிலேட்டர்கள் கையால் இயக்கப்படும் செயற்கையான சுவாசக் கருவிகள் (AMBU - Artificial Manual Breathing Unit) என்று அழைக்கப் படுகின்றது.
சுவாசிக்காத அல்லது சுவாசிப்பதில் தீவிர சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு கையால் பிடித்து இயக்கக் கூடிய இந்தச் சாதனமானது, தானியங்கி முறையில் அழுத்தப்பட்ட சுவாசத்தை வழங்கும்.
AMBU ஒரு கையடக்கச் சாதனமானதால், இரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவப் படுக்கைகளுக்கு ஏற்றதாக அது இருக்கும்.
மேலும் இது அழுத்தத்தைத் தக்க வைக்க நேர்மறையான வெளிசுவாச அழுத்தத்தை (PEEP - positive end expiratory pressure) அதில் ஒரு கூடுதல் அங்கமாகச் சேர்த்துள்ளது.