TNPSC Thervupettagam

தானே சிற்றோடை பிளமிங்கோ சரணாலயம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்

May 11 , 2021 1168 days 568 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது சமீபத்தில்  தானே சிற்றோடை பிளமிங்கோ சரணாலயத்தைச் சுற்றியமைந்த 48.32 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (Eco Sensitive Zone – ESZ) அறிவித்துள்ளது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களானது பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஒரு இடையக மண்டலமாக (Buffer Zone) செயல்படும்.
  • இவை தேசியப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 10 கி.மீ. அளவிலான சுற்றளவில் அமைந்திருக்கும் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கப்படாத பகுதிகளாகும்.
  • தேசியப் பூங்கா () வனவிலங்குச் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப் படும் மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படும் நெருக்கடியை இவை குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்