TNPSC Thervupettagam

தாயகம் திரும்பிய புரு அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் தளர்வு

August 20 , 2018 2164 days 633 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது திரிபுராவிலிருந்து மிசோரம் மாநிலத்திற்கு குடி பெயர்ந்த புரு புலம்பெயர்வோருக்கான விதிமுறைகளை தளர்த்துவதாக ஒப்புதல் அளித்து ‘நான்கு முனை ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது ஜூலை 2018ல் இந்திய அரசாங்கம், மிசோரம் மற்றும் திரிபுரா அரசாங்கம் மற்றும் புரு இடம் பெயர்ந்த மக்கள் மன்றம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

தளர்வுகள்

  • புரு அகதிகளுக்கு ரூ.4 லட்சம் பண உதவியாக கிடைக்க குறைந்த பட்ச தங்கு காலம் 3 வருடத்திலிருந்து 2 வருடமாக தளர்த்தப்பட்டுள்ளது. (அல்லது ஒன்றரை வருடம் கூட)
  • அவர்கள் திரும்பி வந்தவுடன் உடனடியாக ரூ.4 லட்ச உதவித் தொகையில் 90%  வங்கி கடனாக பெறலாம். மேலும் நிதியுதவிக்கான விதிமுறைகளும் தளர்த்தப்படலாம்.
  • கட்டிட உதவியானது ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்