மைக்ரோசாப்ட் அசூரின் க்ளவுட் கம்ப்யூட்டிங் (மேகக் கணினி) மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி “தாய்ஜினோமிக்ஸை” மைக்ரோசாப்ட் மற்றும் தாய்வானின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளன.
இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) சார்ந்த மரபணு பகுப்பாய்வுத் தளமாகும்.
இந்த தளமானது நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளால் வழங்கப்படும் மருத்துவம் மற்றும் மரபணு தரவுகளின் பரந்த அளவிலான அளவீடுகளைச் செயல்படுத்த, ஆய்வு செய்ய மற்றும் பகுப்பாய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
தாய்ஜீனோமிக்ஸானது நோய்களை மருத்துவர்கள் திறம்பட கண்டறிய உதவுவதன் மூலம் மனிதத் தவறுகளைக் குறைக்க உதவுகின்றது.