தாய்ப்பால் ஊட்டும் நிலை குறித்த அறிக்கை
August 12 , 2019
2088 days
735
- சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்தன் தாய்ப்பால் ஊட்டும் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டார்.
- நாட்டில் கைக் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் நடைமுறையில் மணிப்பூர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகியவை இந்தப் பட்டியலின் கடைநிலையில் உள்ளன.
- தேசியத் தலைநகரான டெல்லியும் மிக மோசமான நிலையில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
- பின்வரும் மூன்று குறிகாட்டிகளின் அடிப்படையிலான கூட்டு மதிப்பெண்களை வகுப்பதன் மூலம் இந்த தாய்ப்பாலூட்டும் நிலை குறித்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
- தாய்ப்பாலூட்ட ஆரம்பத்திலேயேத் தொடங்குதல்
- ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளித்தல்
- 6-8 மாத குழந்தைகளுக்கு கூடுதலாக உணவளித்தல்.
Post Views:
735