“மிகப்பெரும் வெற்றிக்கான மகுடம்” என்ற பட்டத்துடன் தாய்லாந்து நாட்டின் புதிய அரசராக மகா வஜ்ஜிரலாங்கோர்ன் என்பவருக்கு தாய்லாந்து அதிகாரப் பூர்வமாக முடிசூட்டியது.
இவர் 1972 ஆம் ஆண்டில் இளவரசராகவும் அரசரின் அதிகாரப்பூர்வ வாரிசாகவும் ஆனார்.
தற்பொழுது இவர் “தாய்லாந்தின் பத்தாவது ராம அரசர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
1782 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் சக்ரி வம்சம் ஆட்சி செய்து வருகின்றது.
சக்ரி வம்சத்தின் 10-வது அரசர் இவராவார்.
தாய்லாந்து அரசியலமைப்பு சார்ந்த முடியரசைக் கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்பு 1950 ஆம் ஆண்டு இந்த அரசரின் தந்தையான பூமிபோல் அதுல்யாதேஜ் என்பவருக்கு முடிசூட்டு விழா கடைசியாக நடத்தப்பட்டது.