தாய்லாந்தின் சட்டக் கட்டமைப்பு ஆனது, தன்பாலினத் திருமணத்தினை அதிகாரப் பூர்வமாகச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
திருமணச் சமத்துவச் சட்டம் ஆனது, "ஆண்," "பெண்," "கணவன்," மற்றும் "மனைவி" போன்ற பாலினங்களைக் குறிப்பிடும் சொற்களை "தனிநபர்" மற்றும் "துணைவர்" போன்ற உள்ளார்ந்த பொருள் கொண்ட சொற்களாக மாற்றியுள்ளது.
இது தன்பாலின இணையர்களுக்கு இடையேயான ஒரு திருமணத்தினால் பெறப்பட்ட சொத்துக்களின் சமமான பிரிவினை மற்றும் உரிமையை உறுதி செய்கிறது.
இது தன்பாலின வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பிரிவினை அல்லது விவாகரத்து வழக்குகளில் நிதி உதவி கோரும் உரிமையை வழங்குகிறது.
தன்பாலினத் திருமணத்தினைச் சட்டப் பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு தைவான் (2017) ஆகும்.