தாய்வழி காசநோயை முடிவுக்குக் கொண்டுவர WHO அமைப்பின் செயல் திட்டம் 2023
November 21 , 2023 370 days 259 0
உலக சுகாதார அமைப்பானது, குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதன் திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
இந்த செயல் திட்டம் ஆனது, 2027 ஆம் ஆண்டிற்குள் காசநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள 90 சதவீத மக்களுக்கு தடுப்பு சிகிச்சைக்கான அணுகலை வழங்குமாறு உலக நாடுகளை வலியுறுத்துகிறது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் 2027 ஆம் ஆண்டிற்குள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இது 2023 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 45 மில்லியன் மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குவதாகும்.
இதில் 4.5 மில்லியன் பேர் குழந்தைகள் மற்றும் 1.5 மில்லியன் பேர் மருந்து எதிர்ப்பு திறன் கொண்ட காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
பல்மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் (MDR-TB) மற்றும் ரிஃபாம்பிசின்-எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் (RR-TB) பாதிப்பு உள்ள 115,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவ வயதினருக்கு சிகிச்சை அளிப்பதற்கான இலக்கில் 19 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் பதிவான 1.3 மில்லியன் காசநோய் உயிரிழப்புகளில், 214,000 பேர் 14 வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர் .
காசநோய் சிகிச்சையை அணுக இயலாத குழந்தைகள் மத்தியில் தான் 96 சதவீத உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.