TNPSC Thervupettagam

தாரனாகி மலை - சட்டப்பூர்வ அந்தஸ்து

February 4 , 2025 19 days 90 0
  • நியூசிலாந்து நாட்டு அரசானது, தற்போது அதிகாரப்பூர்வமாக தாரனாகி மவுண்ட் என்று அழைக்கப் படும் தாரனாகி மௌன்க்கா மலைக்கு மனிதனுக்கு வழங்கப்படும் வகையிலான சட்ட உரிமைகளை வழங்கியுள்ளது.
  • இந்த அங்கீகாரம் ஆனது தாரனாகி மலையைத் தனிநபர் அந்தஸ்து பெற்ற நாட்டின் மூன்றாவது இயற்கை அம்சமாக உருவாக்கியுள்ளது.
  • முன்னதாக வாங்கனுய் நதி மற்றும் தே உரேவேரா தேசியப் பூங்கா ஆகியவை இதே போன்றச் சட்ட உரிமைகளைப் பெற்றன.
  • பழங்குடியின மக்கள், தற்போது தாரனாகி மவுண்ட்கா என்ற அதன் மாவோரி மொழிப் பெயரால் அறியப்படுகின்ற தாரனாகி மலையை ஒரு மூதாதையர் அமைப்பாகக் கருதுகின்றனர்.
  • உள்ளூர்ப் பழங்குடியினரான இவி மற்றும் அரசாங்கம் அதை நிர்வாகிப்பதற்காக என இணைந்துச் செயல்படுவதுடன் தாரனாகி மலையானது தனது சொந்த நிர்வகிப்பு மீதான அந்தஸ்தினையும் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்