TNPSC Thervupettagam

தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம் - RBI

July 17 , 2024 129 days 189 0
  • பெரிய அளவிலான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தினைக் பெருமளவில் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி, மத்திய நிதிநிலை அறிக்கையில், 7 லட்சம் ரூபாய்க்கு மேலான வெளிநாட்டுக் கடன் அட்டை செலவினங்களைத் தாராள மயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் கொண்டுவர உள்ளது.
  • கடன் அட்டை செலவினமானது வருமான மூலத்தில் இருந்து வசூலிக்கப்படும் (TCS) 20 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் கீழ், ஓர் இந்தியக் குடிமகன் இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் ஒரு நிதியாண்டில் 250,000 அமெரிக்க டாலர்கள் வரை தொகையினை பரிமாற்றம் செய்ய முடியும்.
  • LRS திட்டத்தின் கீழ் அதிகப்படியான பணம் அனுப்புவதைத் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • தற்போது, பற்று அட்டைகள், அந்நியச் செலவாணி பரிமாற்ற அட்டைகள் அல்லது பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தும் செலவினங்கள் ஆனது ஒரு நிதியாண்டில் ஒரு நபருக்கு 7 லட்சம் ரூபாய் என்ற வரம்பைத் தாண்டியவுடன் 20 சதவீத TCS விதிக்கப் படுகிறது.
  • இதற்கு மாறாக, கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு LRS விதிகளின் கீழ் TCS விதிக்கப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் LRS திட்டத்தின் கீழ், வெளிநாட்டிற்கு அனுப்பப் பட்ட பண மதிப்பு 31.73 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • இது முந்தைய ஆண்டில் 27.14 பில்லியன் டாலராக இருந்த மதிப்பினை விட சுமார் 16.91 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்