ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபான்களை ரஷ்யா நீக்க உள்ளது.
ரஷ்யாவில் 2003 ஆம் ஆண்டு முதல் தாலிபான் அமைப்பு ஆனது தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
கஜகஸ்தான் நாடானது, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபான்களை நீக்கியது.
தாலிபான்கள் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் ஆதரவு பெற்ற அரசாங்கத்திடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
பெண்களைப் பொது வாழ்விலிருந்து பெருமளவில் தடை செய்யும் ஒரு இஸ்லாமியச் சட்டத்தின் தீவிர வடிவத்தை அவர்கள் அந்நாட்டில் அமல்படுத்தியுள்ளனர்.