பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள லூசன் தீவில் தால் என்ற எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
தால் என்பது ஒரு "சிக்கலான" எரிமலை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
ஒரு கூட்டு எரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த சிக்கலான எரிமலையானது ஒரு முக்கியமான துளை (vent) அல்லது கூம்பு இல்லாத பல வெடிப்பு புள்ளிகளைக் கொண்டது என்று வரையறுக்கப் படுகின்றது.