மாஸ்கோவில் நடைபெற்ற 11வது தால் நினைவு விரைவு சதுரங்கப் போட்டியில் (11th Tal Memorial rapid chess) இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடனான இறுதிச் சுற்றை சமன் செய்து உலக விரைவு சதுரங்க சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மூன்றாவது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேடையரோவ்விடம் சுற்றினை இழந்த விஸ்வநாதன் ஆனந்த், அதன் பின் நான்கு எதிர் போட்டியாளர்களை வீழ்த்தி இறுதிச் சுற்றை அடைந்து பட்டத்தை வென்றுள்ளார்.