TNPSC Thervupettagam

தாவரங்களை உண்ணும் டைனோசர் இனங்கள்

August 25 , 2023 461 days 289 0
  • ஜெய்சால்மரில், நீண்ட கழுத்து கொண்ட, தாவரங்களை உண்ணும் டிக்ரேயோசொரிட் டைனோசரின் மிகப் பழமையான புதைபடிவ எச்சங்களை அறிவியலாளர்கள் கண்டு அறிந்துள்ளனர்.
  • டைனோசர் பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய மையமாக இந்தியா இருந்ததாக இது தெரிவிக்கிறது.
  • இந்தப் புதைபடிவ எச்சங்கள் 167 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் இது வரை அறிவியலாளர்களால் கண்டறியப் படாத புதிய இனத்தைச் சேர்ந்தவையாகும்.
  • இதற்கு ‘தாரோசரஸ் இண்டிகஸ்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இதிலுள்ள முதல் சொல்லானது இந்தப் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தார் பாலைவனத்தைக் குறிக்கிற நிலையில் இதன் இரண்டாவது சொல்லானது அதன் பிறப்பிடத்தினைக் குறிக்கிறது.
  • இது வரையில் வெளிவந்தக் கோட்பாடுகள், மிகப் பழமையான டிக்ரேயோசௌரிட் படிவங்கள் சீனாவில் கண்டறியப் பட்டதாக (சுமார் 166-164 மில்லியன் ஆண்டுகள் பழமையானது) கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்