குஜராத் மாநில வனத் துறையானது கிர் வனப் பகுதி மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தாவர உண்ணிகள் மீதான கணக்கெடுப்பை நடத்துகின்றது.
இந்த கணக்கெடுப்பு குளம்பு வகை மிருகங்களான புள்ளி மான், நீல மான், கடமான், இந்திய குரங்குகள், மயில், இந்திய மான், நாற்கொம்பு மான் மற்றும் காட்டுப் பன்றி ஆகிய உயிரினங்களை கணக்கெடுக்கின்றது.
ஆசியச் சிங்கங்களின் முக்கிய உணவாக வனப் பாலூட்டிகள் மற்றும் குரங்குகள் விளங்குகின்றன.
இந்த குளம்பு வகை மிருகங்களின் கணக்கெடுப்பானது சிறுத்தை, கழுதைப் புலி, சிங்கம் போன்ற விலங்குண்ணிகளுக்கான உணவு குறித்த தகவல்களை தருகின்றது.