TNPSC Thervupettagam

திடீர் வறட்சி குறித்த ஆய்வு

December 3 , 2021 962 days 509 0
  • 1980 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட திடீர் வறட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளதாக சமீபத்திய ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • 1951 முதல் 2018 வரையில் இந்தியாவில் பருவமழைக் காலங்களில் ஏற்பட்ட திடீர் வறட்சியினால் சுமார் 10-15 சதவிகித அளவில் நெல் மற்றும் மக்காச்சோளம் பயிரிடப் பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்டன.
  • 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் வெப்ப மற்றும் வறண்ட நிலைகள் ஒன்றாக நிகழ்வதன் வீதமானது 5 மடங்கிற்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இது திடீர் வறட்சியில் ஏறத்தாழ 7 மடங்கு உயர்வினை ஏற்படுத்தும்.
  • இந்திய நாடானது பருவமழைக் காலத்தில் உள்ள அளவினை விட பருவமழைக் காலத்தில் அதிக வறட்சியைக் காணும்.
  • திடீர் வறட்சி என்பது விரைவாகத் தோன்றும் அல்லது தீவிரமடையும் வறட்சி நிலை கும்.
  • இயல்பான மழைப் பொழிவை விட குறைவான மழைப் பொழிவுடன் அசாதாரணமாக அதிக வெப்பநிலை, காற்று மற்றும் கதிர்வீச்சு போன்ற சூழ்நிலைகளில் திடீர் வறட்சி ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்