வீடுகளைக் கட்டுவதற்கானத் திட்டமிடல் அனுமதியை ஆன்லைனில் வழங்க தமிழ்நாடு மாநில அரசு தொடங்கியுள்ளது.
இது அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும்.
2,500 சதுர அடிக்கு குறைவான அளவிலான மனைகளை வைத்திருக்கும் சொத்தின் உரிமையாளர்கள் மற்றும் 1,200 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு விடுதிகளைக் கட்டத் திட்டமிட்டவர்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலம் திட்டமிடல் அனுமதியைப் பெற முடியும்.
சொத்து வரி, வணிக வரி மற்றும் நீர் & கழிவு நீர் வரிகள் ஆகியவற்றைச் செலுத்த ஆன்லைன் முறையைப் பயன்படுத்தலாம்.
இது மத்திய அரசின் 2016 ஆம் ஆண்டின் மாதிரிக் கட்டிட துணை விதிகளின் அடிப்படையில் அமைந்த திட்டமிடல் அனுமதியை எளிமைப் படுத்துவதற்கான ஒரு தளமாகும்.