இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) ஆனது இமாச்சலப் பிரதேசத்தில் "திட்டம் 414" என்ற சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான 414 வாக்குச் சாவடிகளில் அதிகபட்ச வாக்குப் பதிவினை பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த 414 நிலையங்களை மாதிரி வாக்குச்சாவடிகளாக மாற்றுவதோடு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படும்.
22 சட்டமன்றத் தொகுதிகளிலும் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு பதிவான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவினை 72% என்று அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் சராசரியாக 72.42% வாக்குகள் பதிவாகி இருந்தன.