TNPSC Thervupettagam

திட எரிபொருள் குழாய் கொண்ட ராம்ஜெட்

February 13 , 2019 1985 days 659 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் ஒடிசாவில் இரண்டாவதாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட திட எரிபொருள் குழாய் கொண்ட ராம்ஜெட் (Solid Fuel Ducted Ramjet - SFDR) உந்துவிசை அடிப்படையில் அமைந்த ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
  • புரொபெல்லன்ட் மற்றும் ஆக்சிடைஸ்சர்கள் ஆகியவற்றைக் கொண்டுச் செல்லும் வழக்கமான ராக்கெட்டுகளைப் போலல்லாது ராம்ஜெட் ஆனது ஒரு ஜெட் இயந்திரத்தைப் போல காற்றை ஒரு ஆக்சிடைசராக உபயோகிக்கிறது. எனவே இதன் மூலம் தேவைப்படும் எரிபொருளின் எடை வெளியேற்றப்படுகின்றது.
  • இதன் மூலம் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு வசதியினை அளிப்பது மற்றும் பல அடுக்கு ஆகாயப் பாதுகாப்பு கொண்டது என்ற இரண்டு பிரிவுகளில் வேகமான நீண்ட தூரம் செல்கின்ற ஏவுகணைகளை இந்தியா கொண்டிருக்க முடியும்.
  • வழக்கமான ஏவுகணைகளின் செயல்பாடுகளில் சமரசம் செய்திடும் வகையில் சமாளிக்கக் கூடிய இலக்குகளுக்கு எதிராக அடுத்த தலைமுறை ஏவுகணைத் தொழில் நுடபத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் அணியில் இந்தியாவின் சேர்க்கையை ஏவுகணைகளில் ராம்ஜெட்டின் வெற்றிகரமான பயன்பாடு குறிப்பிடும்.
  • இந்தோ-ரஷ்யா கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட ராம்ஜெட் இயந்திரத்தின் முதல் பறக்கும் சோதனை 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • அஸ்திராவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு போன்ற பல்வேறு ஏவுகணைகளில் இந்தியாவின் இந்த அமைப்பு பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்