TNPSC Thervupettagam

திட எரிபொருள் குழாய் ராம்ஜெட் தொழில்நுட்பம் (SFDR)

March 8 , 2021 1268 days 768 0
  • திட எரிபொருள் குழாய் ராம்ஜெட் தொழில்நுட்பத்தை (Solid Fuel Ducted Ramjet technology - SFDR) அடிப்படையாகக் கொண்ட விமானச் சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  • இது ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் சோதிக்கப் படுகின்றது.
  • SFDR தொழில்நுட்பமானது DRDO அமைப்பிற்கு தொழில்நுட்ப நன்மையுடன் சேர்த்து நீண்ட தூர வரம்பு கொண்ட வானிலிருந்து வானில் உள்ள ஏவுகணைகளை உருவாக்க உதவும்.

ராம்ஜெட்

  • ராம்ஜெட் என்பது காற்றினால் இயங்கும் ஜெட் இயந்திரத்தின் ஒரு வடிவமாகும். இது சுழலும் ஒரு அமுக்கி இல்லாமல் எரிப்புக்காக உள்வரும் காற்றை அமுக்க வாகனத்தின் முன்னோக்கு இயக்கத்தைப் பயன்படுத்துகின்றது.
  • ராம்ஜெட்டுகள் மீஒலி வேக வேகத்தில் மிகவும் திறனுள்ள வகையில் செயல்படுகின்றன. ஆனால் அவை மீ மிகை ஒலி வேகத்தில் திறனுள்ள வகையில் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்