TNPSC Thervupettagam

திட ஏவுகல உந்திகள் சோதனைகள்

May 19 , 2022 829 days 491 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, HS200 எனப்படும் திட ஏவுகல உந்திகள் சோதனைகள் நிலைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • இந்தச் சோதனையை வெற்றிகரமாக முடித்தது இஸ்ரோவின் புகழ்பெற்ற ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
  • HS200 என்ற உந்தியானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.
  • அதே சமயம் உந்திகளின் வார்ப்புச் செயல்முறை ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நிறைவு செய்யப்பட்டது.
  • S200 மோட்டார் என்பது LVM3 ஏவுகலத்தின் முதல் நிலையில் செயல்படும்.
  • இது 4,000 கிலோ எடையுள்ள ஒரு செயற்கைக் கோளைப் புவிநிலைப் பரிமாற்ற சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான கூடுதலாக பொருத்தப்பட்ட ஏவுகல உந்திகளாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்