TNPSC Thervupettagam

திபெத்தின் செடாங்பு கல்லி பகுதியில் நிலச்சரிவு

September 2 , 2024 40 days 98 0
  • 2017 ஆம் ஆண்டு முதல் திபெத்தியப் பீடபூமியின் செடாங்பு ஓடைக்கால் (நீரினால் ஏற்பட்ட பள்ளத்தாக்கு) பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் நிகழ்வுகள் ஏற்படும் தகவு நிலை மற்றும் அப்பகுதியின் விரைவான வெப்பமயமாதல் இந்தியாவைப் பாதிக்கக் கூடும்.
  • 2012 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்தப் பகுதியில் அரிதாக 0º C செல்சியசிற்கு மேல் வெப்பநிலை பதிவானது.
  • ஆனால், 1981-2018 ஆம் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் வருடாந்திர வெப்ப நிலை ஆனது 0.34º முதல் 0.36º C என்ற விகிதத்தில் அதிகரித்ததாக போமி மற்றும் லின்ஸி ஆகிய இடங்களில் உள்ள வானிலை நிலையங்கள் வெளிப்படுத்தின.
  • செடாங்பு பனிப்பாறை மற்றும் அதன் பள்ளத்தாக்கின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள செடாங்பு  நீர் அரிப்பு பள்ளம் ஆனது 11 கிலோ மீட்டர் நீளமும் 66.8 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் அமைந்துள்ளது.
  • இது யார்லுங் சாங்போ அல்லது சாங்போ நதியில் இணைவதோடு இது இணையும் இடத்திற்கு அருகே அது மிகப்பெரிய வளைவினைக் கொண்டுள்ளதால் பெருவளைவு என்று அழைக்கப்படுகிறது.
  • 505 கிலோ மீட்டர் நீளமும் 6,009 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தாக்கை உருவாக்கும் முன்பு நம்சா பர்வா மலை (உயரம் 7,782 மீட்டர்) மற்றும் கியாலா பெரி மலை (7,294 மீட்டர்) ஆகியவற்றினைச் சுற்றி பாய்கிறது.
  • பூமியின் ஆழமானப் பள்ளத்தாக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
  • நிலச் சரிவு என்பது பாறை மற்றும் மண்ணின் புவியீர்ப்பு தாக்கத்தினால் ஒரு சாய்வு நிலப்பரப்பில் பாயும் இயக்கம் ஆகும்.
  • ஒரு நீர் அரிப்பு பள்ளம் என்பது பாயும் நீர், பெருமளவிலான நிலச் சரிவு அல்லது இரண்டின் அரிப்பினால் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்