2017 ஆம் ஆண்டு முதல் திபெத்தியப் பீடபூமியின் செடாங்பு ஓடைக்கால் (நீரினால் ஏற்பட்ட பள்ளத்தாக்கு) பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் நிகழ்வுகள் ஏற்படும் தகவு நிலை மற்றும் அப்பகுதியின் விரைவான வெப்பமயமாதல் இந்தியாவைப் பாதிக்கக் கூடும்.
2012 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்தப் பகுதியில் அரிதாக 0º C செல்சியசிற்கு மேல் வெப்பநிலை பதிவானது.
ஆனால், 1981-2018 ஆம் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் வருடாந்திர வெப்ப நிலை ஆனது 0.34º முதல் 0.36º C என்ற விகிதத்தில் அதிகரித்ததாக போமி மற்றும் லின்ஸி ஆகிய இடங்களில் உள்ள வானிலை நிலையங்கள் வெளிப்படுத்தின.
செடாங்பு பனிப்பாறை மற்றும் அதன் பள்ளத்தாக்கின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள செடாங்பு நீர் அரிப்பு பள்ளம் ஆனது 11 கிலோ மீட்டர் நீளமும் 66.8 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் அமைந்துள்ளது.
இது யார்லுங் சாங்போ அல்லது சாங்போ நதியில் இணைவதோடு இது இணையும் இடத்திற்கு அருகே அது மிகப்பெரிய வளைவினைக் கொண்டுள்ளதால் பெருவளைவு என்று அழைக்கப்படுகிறது.
505 கிலோ மீட்டர் நீளமும் 6,009 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தாக்கை உருவாக்கும் முன்பு நம்சா பர்வா மலை (உயரம் 7,782 மீட்டர்) மற்றும் கியாலா பெரி மலை (7,294 மீட்டர்) ஆகியவற்றினைச் சுற்றி பாய்கிறது.
பூமியின் ஆழமானப் பள்ளத்தாக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
நிலச் சரிவு என்பது பாறை மற்றும் மண்ணின் புவியீர்ப்பு தாக்கத்தினால் ஒரு சாய்வு நிலப்பரப்பில் பாயும் இயக்கம் ஆகும்.
ஒரு நீர் அரிப்பு பள்ளம் என்பது பாயும் நீர், பெருமளவிலான நிலச் சரிவு அல்லது இரண்டின் அரிப்பினால் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பாகும்.