திபெத்திய ஜனநாயக தினமானது செப்டம்பர் 02 ஆம் தேதியன்று தர்மசாலா என்னும் இடத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பகுதியளவு இறையாண்மை பெற்ற திபெத்திய அரசாங்கத்தின் பதவியேற்றத்தினைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப் பட்டது.
1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று, திபெத்திய நாடாளுமன்றத்தின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், திபெத்திய ஜனநாயக அமைப்பைத் துவக்கும் வகையில், புத்தகயா எனுமிடத்தில் பதவியேற்றனர்.
1963 ஆம் ஆண்டில், தலாய் லாமா ஜனநாயகம் மற்றும் உலகளாவிய விழுமியங்கள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் திபெத்திய அரசியலமைப்பை இயற்றினார்.
1975 ஆம் ஆண்டில், மத்திய திபெத்திய நிர்வாக அமைப்பின் உயர்நிலை அமைப்பான கஷாக், செப்டம்பர் 02 ஆம் தேதியைத் திபெத்திய ஜனநாயகத்தின் ஸ்தாபன நாளாக அறிவித்தது.