TNPSC Thervupettagam

திபெத்திய பழுப்புக் கரடி

January 22 , 2024 179 days 211 0
  • அரிய திபெத்திய பழுப்புக் கரடி இந்தியாவில் முதல் முறையாக தென்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
  • வடக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் இந்தக் கரடி தென்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது நாட்டில் உள்ள பாலூட்டிகளின் பன்முகத்தன்மையில் ஒரு புதிய கிளையினத்தைச் சேர்த்துள்ளது.
  • ஓர் அனைத்துண்ணி இனமான இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் அமைந்த அல்பைன் காடுகளிலும் பசும் புல்வெளிகளிலும் காணப்படுகிறது.
  • திபெத்திய நீலக் கரடி என்றும் அழைக்கப்படுகின்ற திபெத்திய பழுப்புக் கரடி இமயமலைப் பகுதியில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதுவரை, நேபாளம், பூடான் மற்றும் திபெத்தியப் பீடபூமியின் சில பகுதிகளில் இந்த விலங்கு தென்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்