அரிய திபெத்திய பழுப்புக் கரடி இந்தியாவில் முதல் முறையாக தென்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
வடக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் இந்தக் கரடி தென்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது நாட்டில் உள்ள பாலூட்டிகளின் பன்முகத்தன்மையில் ஒரு புதிய கிளையினத்தைச் சேர்த்துள்ளது.
ஓர் அனைத்துண்ணி இனமான இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டர் மற்றும் அதற்கு மேலான உயரத்தில் அமைந்த அல்பைன் காடுகளிலும் பசும் புல்வெளிகளிலும் காணப்படுகிறது.
திபெத்திய நீலக் கரடி என்றும் அழைக்கப்படுகின்ற திபெத்திய பழுப்புக் கரடி இமயமலைப் பகுதியில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, நேபாளம், பூடான் மற்றும் திபெத்தியப் பீடபூமியின் சில பகுதிகளில் இந்த விலங்கு தென்பட்டுள்ளது.