TNPSC Thervupettagam

திமிங்கல சுறா மீன்

April 1 , 2021 1209 days 642 0
  • ஒடிசா கடற்கரையில் திமிங்கல சுறா மீன் ஒன்று மீனவர்களால் மீட்டு எடுக்கப் பட்டு உள்ளது.
  • ஆமைகள், திமிங்கலங்கள் மற்றும் சுறாக்கள் போன்ற பெரிய கடல்சார் விலங்குகளுக்கு இது ஒரு முக்கியமான உயிரினமாகும்.
  • உடலில் புள்ளிகளுடன் கூடிய திமிங்கல சுறாவானது பெருங்கடலிலுள்ள மிகப்பெரிய மீனாகும்.
  • இது மீனவ மொழியில் “Gentle Giant” என அழைக்கப் படுகிறது.
  • இது ஒரு “Filters Feeder” சுறாவாகும்.
  • அதாவது மற்ற சுறாமீன்களைப்  போல இது மாமிசம் உண்ணாது என இதற்குப் பொருளாகும்.
  • இது கடல்நீரை வடிகட்டி சிறிய அளவிலான மிதவை உயிரிகளை உட்கொள்ளும்.
  • இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான திமிங்கல சுறாக் கூட்டங்கள் குஜராத் கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • வங்காள விரிகுடாப் பகுதியில் ஆந்திரப் பிரதேச கடற்பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றன.
  • திமிங்கல சுறாக்கள் உலகின் அனைத்து வெப்பமண்டலப் பெருங்கடல் பகுதிகளிலும் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்