‘தண்ணீரின் புலி’ என்றழைக்கப்படும் நன்னீர் வாழ் பெரிய மீனான திமில் உடைய கெண்டை மீனானது காவேரி ஆற்றின் வடிநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த மீனானது 2018 ஆம் ஆண்டு தோர் ரெமாதேவி எனும் அறிவியல் பெயரைப் பெற்றது.
இந்த மீனானது தற்போது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் அச்சுறு நிலையிலுள்ள உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலின்படி மிகவும் அபாய நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நன்னீர் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக பணிபுரியும் ஷோயல் எனும் சர்வதேச நிறுவனமானது இந்த திமில் உடைய கெண்டை மீனைப் பாதுகாப்பதற்காக “கெண்டை திட்டத்தினை” துவங்கியுள்ளது.