TNPSC Thervupettagam

தியாகிகள் தினம் – ஜனவரி 30

January 31 , 2018 2488 days 4453 0
  • இந்தியாவில் பல்வேறு நாட்கள் தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகின்றன.
  • தேசிய அளவில் தியாகிகள் தினமானது (Matyr’s Day) சர்வோதயா தினம் என்றழைக்கப்படுகின்றது.
  • நாட்டின் தியாகிகளாக அங்கீகரிக்கும் நபர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இத்தினங்கள் கொண்டாடப்படுகின்றன.
  • 1948-ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவினால் தேசத் தந்தையான மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தியாகிகள் தினத்தன்று,  பகல் 11 மணி அளவில் இரு நிமிட மௌன அஞ்சலி நாடு முழுவதும் அனுசரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்