இந்தியச் சுதந்திரத்திற்காக துணிவுடன் போராடிய துணிவுமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று, லாகூர் சிறையில், பகத்சிங், இராஜ்குரு மற்றும் சுக்தேவ் போன்ற இளம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப் பட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஷாஹீத் திவாஸ் தினத்தன்று இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர்கள் மேற்கொண்ட தியாகத்திற்கு கௌரவமளிக்கப் படுகிறது.