TNPSC Thervupettagam

தியான்காங் - 1

April 9 , 2018 2295 days 734 0
  • சீனாவைச் சேர்ந்த கட்டுப்பாட்டை இழந்த தியான்காங் – 1 விண்வெளி ஆய்வகம் புவியின் வளிமண்டலப் பகுதியில் மீண்டும் நுழைந்து உலகின் விண்கல இடுகாட்டுப் பகுதிக்கு அருகில் தென் பசுபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில்  தரையிறங்கியுள்ளது.
  • தியான்காங் – 1 (சொர்க்கலோக அரண்மனை அல்லது பால்வழி அரண்மனை – 1) ஆனது சீனாவின் முதல் மூல முன்மாதிரி விண்வெளி நிலையம் அல்லது விண்வெளி ஆய்வகம் ஆகும்.

  • விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மற்ற பிற நாடுகளுடன் இணையாதிருக்கும் வகையில் தன்னிச்சையான (Independent) சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனாவின் முயற்சியின் ஒரு பகுதியான இது செப்டம்பர் 2011ல் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • தியான்காங் – 1 தன் வாழ்நாளில், புவி சுற்றுவட்டப் பாதையில் சுழிசார்பியக்கத் தன்மை (சந்தித்தல்) மற்றும் அதனுடைய தரையிறங்கும் தன்மை ஆகியவற்றை நிரூபிப்பதற்காக, விண்வெளி வீரர்கள் கொண்ட ஆய்வகமாகவும், சோதனைத் தளமாகவும் செயல்பட்டிருக்கிறது.
  • தியான்காங்-1 ஆனது பெரிய, அதிகப்படியான விண்வெளி மையங்களை சுற்றுவட்டப் பாதையில் 2023ல் நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் தியான்காங் திட்டத்தின் முதல் கூறு ஆகும். அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச விண்வெளி மையம் 2023ல் தன்னுடைய பணியிலிருந்து விடைபெறும்.
  • தியான்காங் – 1 ஐ 2013 ஆம் ஆண்டு விடுவிக்க சீனாவால் திட்டமிடப்பட்டது. இதன் செயல்பாடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. தற்போது 2016ல் தியான்காங் – 1 பணியிலிருந்து ஒய்வுபெற்றது (decommissioned).
  • சீனா, தன்னுடைய இரண்டாவது விண்வெளி ஆய்வு மையமான தியான்காங் – 2ஐ 2017ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்