TNPSC Thervupettagam
February 19 , 2023 519 days 235 0
  • குஜராத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் விழுந்த விண்கற்கள் ஆனது, அரிதான ஆபிரைட் வகை விண்கற்கள் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
  • இரண்டு கிராமங்களில் விழுந்த விண்கல் துண்டுகளுக்கு தியோதர் விண்கல் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • ஆபிரைட் விண்கல் என்பது ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் உருவாகிய, பூமியில் காணப் படாத சில தனித்துவமான தாதுக்களைக் கொண்டுள்ள ஒரு கரடுமுரடான எரிமலைப் பாறை ஆகும்.
  • இந்தியப் பகுதி மீது நூற்றுக்கணக்கான விண்கற்கள் மோதியுள்ளன, என்றாலும் ஆபிரைட் விண்கல் இந்தியப் பகுதியில் விழுவது இது இரண்டாவது முறையாகும்.
  • முதல் முறையாக 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் பஸ்திப் என்ற பகுதியில் ஆபிரைட் விண்கல் விழுந்தது.
  • 1836 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை உலகளவில் ஆப்பிரிக்காவில் மூன்று பகுதிகள் மற்றும் அமெரிக்காவில் ஆறு பகுதிகள் உட்பட, குறைந்தது 12 இடங்களில் ஆபிரைட் விண்கற்கள் விழுந்துள்ளன.
  • விண் வீழ்கற்கள் என்பது விண்வெளியில் உள்ள சில திடப்பொருளின் உடைந்த துண்டுகள், ஒரு கிரகம் அல்லது துணைக்கோளின் மீது மோதி, அவற்றின் மேற்பரப்பை அடையும் பாறைத் துண்டுகள் ஆகும்.
  • அவை மேற்பரப்பை அடைந்த பிறகு, அவை விண்கற்கள் என அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்