TNPSC Thervupettagam

திரள் வெடிப்பு நிகழ்வு

February 1 , 2020 1762 days 869 0
  • நமது அண்டத்தில் காலப்போக்கில் வெவ்வேறு விகிதங்களில் திரள் வெடிப்பு நிகழ்வு நடப்பதாக வானியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • திரள் என்பது ஈர்ப்பு விசையினால் ஏற்படும் பொருள்கள் சேகரிப்பின் மூலம் கிரகங்கள் மற்றும் பிற விண்வெளிக் கோள்கள் உருவாகும் நிகழ்வாகும்.
  • சில நேரங்களில் உருவாகும் நட்சத்திரமானது ஒரு பெரிய அளவிலான பொருளை விழுங்குகின்றது. இதன் விளைவாக மிகப் பெரிய நட்சத்திரத்தில் வெடிப்பு நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இது திரள் வெடிப்பு நிகழ்வு என்று அழைக்கப்படுகின்றது.
  • திரள் வெடிப்பு நிகழ்வானது முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கண்காணிக்கப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மேசர் கண்காணிப்பு அமைப்பானது ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இந்த நிகழ்வைக் கண்காணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்