திருவனந்தபுரத்திலுள்ள வலியமாலாவில் அமைந்துள்ள இஸ்ரோவினுடைய திரவ உந்துதல் அமைப்பு மையத்தின் புதிய இயக்குநராக (Liquid propulsion System’s Centre) டாக்டர்.V.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவை கலந்த எரிபொருள் உந்தியின் பயன்பாட்டினையுடைய 20 டன் உந்து கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் C25 கிரையோஜெனிக் எரிபொருள் நிலையை (C25 Cryogenic Stage) வெற்றிகரமாக இவர் தலைமையிலான குழு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.