TNPSC Thervupettagam

திரிக்கை வடிவிலான காந்தப் புலம்

April 5 , 2024 105 days 128 0
  • பால்வெளி அண்டத்தின் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி சுழல் வடிவத்தில் திருகியமைந்த வலுவான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு காந்தப்புலத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் காந்தப்புலத்தின் அமைப்பு ஆனது சாகிட்டாரியஸ் A*, அல்லது Sgr A* எனப் படும் கருந்துளையின் விளிம்பிலிருந்து வெளிப்படுகிறது.
  • இது இதுவரை படம்பிடிக்கப்பட்ட ஒரே கருந்துளையைச் சுற்றியுள்ள அமைப்பு ஒன்றை ஒத்திருக்கிறது.
  • மிகப்பெரிய கருந்துளையானது மெஸ்ஸியர் 87 அல்லது M87 எனப்படும் அருகிலுள்ள அண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
  • வலுவான காந்தப்புலங்கள் ஆனது கருந்துளைகளுக்கான பொதுவான அம்சமாக இருக்கலாம் என்பதை இது குறிக்கிறது.
  • M87* என்ற M87 கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப்புலம் ஆனது, சக்தி வாய்ந்த அயனியாக்கப்பட்ட காந்தப்புல தாரைகளை விண்வெளியில் செலுத்துவதற்கு மிகவும் உதவுகிறது.
  • Sgr A* கருந்துளையினைச் சுற்றி இன்றுவரை இத்தகைய அயனியாக்கப்பட்ட காந்தப் புல தாரைகள் கண்டறியப்படவில்லை என்றாலும், அவை இருக்கக் கூடும் என்றும், எதிர்காலத்தில் கண்டறியப்படும் என்பதை இது குறிக்கிறது.
  • Sgr A* நமது சூரியனை விட 4 மில்லியன் மடங்கு நிறை கொண்டது மற்றும் சுமார் 26,000 ஒளியாண்டுகள் - ஒளியானது பூமியிலிருந்து ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம், 5.9 டிரில்லியன் மைல்கள் (9.5 டிரில்லியன் கி.மீ.) - தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்