TNPSC Thervupettagam

திரிபுராவின் முதலாவது SEZ – சப்ரூம்

December 21 , 2019 1676 days 536 0
  • திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரில் முதலாவது SEZ (சிறப்புப் பொருளாதார மண்டலம் - Special Economic Zone) அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த SEZ ஆனது வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்துதல், ரப்பர் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றில் முதன்மையாகக் கவனம் செலுத்த இருக்கின்றது.
  • இந்த SEZஆனது திரிபுரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினால் உருவாக்கப்பட இருக்கின்றது.
  • முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10AAன் கீழ் SEZ பிரிவுகளுக்கான ஏற்றுமதி வருமானத்தில் 100% வருமான வரி விலக்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • SEZ ஆனது 12,000 திறன் சார்ந்த வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் இது அமைய இருக்கும் இடமானது சிட்டகாங் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் அதிக முதலீடுகளை ஈர்க்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்